வீட்டில் ரவை உப்பு மா மீதி இருந்தால்…
சமையலுக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் வரமிளகாய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரமாக வெந்து விடும்.
வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சிக்கன் மட்டன் ரோஸ்ட் செய்யும் போது எண்ணெய் அதிகமாகி விட்டால் சிறிது அரிசி மாவு தூவினால் சரியாகிவிடும். கறி சுவை மற்றும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
கருவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிகள் என எதுவும் எட்டி கூட பார்க்காது.
வீட்டில் ரவை உப்புமா மீதி இருந்தால் அதனோடு சிறிது அரிசி மாவை கலந்து வடையாக தட்டி எண்ணெயில் வறுத்து எடுத்தால் அட்டகாசமான வடை தயார்.
0
Leave a Reply